News January 30, 2025

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு விருது

image

புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் 36 வது சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழா இன்று (ஜன.30) கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News February 23, 2025

புதுச்சேரி காகிதமில்லா சட்டப்பேரவையாக மாற்றம்

image

புதுச்சேரி மாநிலத்தில் காகிதமில்லா சட்டப்பேரவை பயிற்சி அரங்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்  முன்னிலையில் முதலமைச்சர் என். ரங்கசாமி ரிப்பன் வெட்டி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமிநாராயணன்  சட்டமன்ற உறுப்பினர்களுடன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்.

News February 23, 2025

புதுவை போக்குவரத்து துறை எச்சரிக்கை

image

புதுச்சேரியில் பைக் டாக்சிக்கு உரிய அனுமதி பெறவில்லை. பொதுமக்கள் சொந்த வாகனத்தை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வணிக நோக்கத்திற்காக வாகனம் பயன்படுத்தும்போது அதற்கான வரி செலுத்தி பெர்மிட் பெற வேண்டும். மஞ்சள் நிற நம்பர் பிளேட் பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

News February 22, 2025

விவசாயிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய புதுச்சேரி போக்சோ கோர்ட்டு

image

விழுப்புரம் மாவட்டம் கயத்தார் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன்(31) கடந்த 27.06.2019 அன்று திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக வழக்குப்பதிந்து புதுச்சேரி போக்சோ கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜானகிராமனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், பெற்றோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!