News January 30, 2025

தஞ்சையில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

image

தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று (ஜன.29) வெளியிட்டுள்ள செய்தி‌குறிப்பில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் போன்ற விண்ணப்பங்கள் கடந்த 2-ந்தேதி முதல் பெறப்பட்டு, இதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (பிப்.28) -ஆம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News April 30, 2025

செல்வத்தை அள்ளித் தரும் அட்சயபுரீஸ்வரர் கோவில்

image

தஞ்சை, விளங்குளத்தில் அட்சயபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலில் சாமிக்கு விளக்கு ஏற்றி, சிறப்பு அபிஷேகம் செய்தால் நினைத்தது நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். மேலும் இங்கு அட்சய திரிதியை நாளில் வேண்டினால் செல்வம் செழிக்கும், நீண்ட ஆயுள் பெருகும், கல்வி போன்றவற்றில் சிறக்கலாம் என்பது நம்பிக்கையாகும். அட்சய திரிதியை நாளில் உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் SHARE பண்ணுங்க

News April 30, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

image

பட்டுக்கோட்டை பகுதியை சேந்தவர் வினோத் (25). வெல்டிங் தொழிலாளியான இவர், அதே பகுதியை சேர்ந்த 13 வயதுச் சிறுமியிடம், காதலிப்பதாகக் கூறி வந்துள்ளார். இந்நிலையில் திங்கள்கிழமை கடைவீதிக்கு வந்த சிறுமியை கட்டிப்பிடித்து, பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் வினோத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News April 29, 2025

தஞ்சை மாவட்டத்தில் மதுக்கடைகள் இயங்காது

image

மே தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் செயல்படாது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் உள்ள மதுபான கடைகள், அதையொட்டி பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி கடைகள் மூடி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!