News January 30, 2025
தென்காசி மாவட்ட அணிகளின் நீர் இருப்பு நிலவரம்

தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே 132 அடி முழு கொள்ளளவு உள்ள அடவி நயினார் அணையின் நீர்மட்டம் 73.25, 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 55.45 அடி, 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமன் நதி அணை நீர்மட்டம் 63 அடி, 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் 60.60 அடியாக உள்ளதாக இன்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News July 10, 2025
தென்காசியில் ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

மாநில அளவில் 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்ப படிவத்துடன், ஆவணங்களை https://tinyurl.com/Panchayataward தகுதியான ஊராட்சிகள் (or) https://cms.tn.gov.in/cms migrated/document/forms/Samooga Nallinakka Ooraatchi Award Application.pdf பதிவிறக்கலாம். *SHARE IT
News July 10, 2025
தென்காசியில் வேலை வாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், ஜீலை மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜூலை 18ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது. முகாமில் 20க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். மறக்காம ஷேர் பண்ணுங்க
News July 10, 2025
கணவர் மடியில் பிரிந்த மனைவியின் உயிர்

குற்றாலத்தில் சீசன் காலம் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் திரண்டு வந்து குளித்து சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டையைச் சார்ந்த ராமநாதன், தெய்வானை தம்பதியினர் நேற்று இரவு 11 மணியளவில் குளித்துவிட்டு நடந்து செல்லும் பாதையில் இருந்த போது கணவர் மடியில் சாய்ந்து நிலையில் தெய்வானைக்கு மூச்சு திணறல் காரணமாக உயிர் பிரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.