News March 27, 2024
டீசல் விலையால் விலைவாசி உயர்ந்துள்ளது

டீசல் விலை அதிகரித்ததே விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அத்தியாவசியப் பொருட்கள் 40% அளவுக்கு விலையேற்றம் கண்டதாக குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்ததாகக் கூறினார். மேலும், வீட்டு வரி, தண்ணீர் வரி, குப்பை வரி என திமுக அரசு அனைத்திற்கும் வரி விதிப்பதாக அவர் கடுமையாக விமர்சித்தார்.
Similar News
News November 6, 2025
வயிற்று கொழுப்பை கரைக்க காலையில் இத பண்ணுங்க!

Russian Twist உடற்பயிற்சியை செய்வது அடிவயிற்று கொழுப்பை கரைக்க உதவும் ✦செய்முறை: தரையில் கால் முட்டியை மடக்கிய படி, பாதங்கள் தரையில் படாதவாறு அமரவும்.(படத்தில் உள்ளது போல) பேலன்ஸுக்காக முதுகை பின்னோக்கி வளைத்து, வயிற்று தசைகளை இறுக்கமாக வைக்கவும். கைகளை சேர்த்து வைத்து, உடலை வலதுபுறமாக திருப்பவும். அதே போல, இடதுபுறமாக திருப்பவும். இதே போல, மாறி மாறி 15- 20 முறை என 2 செட்களாக செய்யலாம்.
News November 6, 2025
கடைசி நேரத்தில் கட்சி மாறினார் MLA

பிஹாரில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் <<18211386>>வேட்பாளர்<<>>, MLA கட்சி தாவினர். பிரசாந்த் கிஷோரின் ‘ஜன் சுராஜ்’ கட்சி சார்பில் முங்கெர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சஞ்சய் சிங்க் பாஜகவில் இணைந்தார். இந்த இணைப்பு நடந்த கொஞ்ச நேரத்திலேயே, பிர்பெயின்தி தொகுதியின் பாஜக MLA-வான லலன் குமார் அக்கட்சியில் இருந்து விலகி தேஜஸ்வி முன்னிலையில், RJD-யில் இணைந்துள்ளார்.
News November 6, 2025
3 கோலங்களில் காட்சியளிக்கும் முருகன்.. எங்குமில்லா அதிசயம்

காலையில் குழந்தையாக, மதியம் இளைஞனாக, மாலையில் முதுமையாக முருகன் காட்சி தரும் பாலசுப்ரமணியன் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தொடர்ந்து 3 செவ்வாய்கிழமைகளில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்குமாம். அருணகிரிநாதர் திருப்புகழில் இக்கோயிலின் முருகனை பற்றி பாடியுள்ளார். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


