News March 27, 2024
புதுச்சேரியில் 34 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

புதுச்சேரியில் 34 வேட்பாளர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்கள். புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி உட்பட 34 வேட்பாளர்கள் 45 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் தெரிவித்தார்.
Similar News
News March 21, 2026
புதுச்சேரி: அமைச்சர் நமச்சிவாயம் சொத்து விவரம் வெளியீடு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன. அவரது பெயரில் அசையும் சொத்துகள் ₹16.97 லட்சமும், அசையா சொத்துகள் ₹27.10 கோடியும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரது மனைவி பெயரில் அசையும் சொத்துகள் ₹8.48 கோடியும், அசையா சொத்துகள் ₹33.12 கோடியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 21, 2026
புதுச்சேரி: A, B படிவம் பெற்ற பாஜக வேட்பாளர்கள்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து, A Form மற்றும் B Form ஆகியவற்றைப் பெற்றனர். இந்த நிகழ்வின் மூலம் பாஜக கட்சியின் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
News March 21, 2026
புதுச்சேரி: முன்னாள் சபாநாயகர் வேட்புமனு தாக்கல்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நடைப்பெற்று வருகிறது. இதில் லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும், முன்னாள் புதுவை மாநில சபாநாயகர் சப்தகிரி வி.பி.சிவக்கொழுந்து இன்று (மார்ச் 21) சனிக்கிழமை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


