News January 30, 2025

மீசை ராஜேந்திரனை வாழ்த்திய ரஜினி

image

உடல் உறுப்பு தானம் செய்த மீசை ராஜேந்திரனை, ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். நடிகரும், தேமுதிக பிரமுகருமான மீசை ராஜேந்திரன் தனது பிறந்தநாளையொட்டி, TN அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இதையறிந்த பிரேமலதா விஜயகாந்த் அவரை நேரில் அழைத்து பாராட்டினார். அதேபோல தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு, ரஜினிகாந்தும் வாழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News September 2, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 2, ஆவணி 17 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: தசமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை

News September 2, 2025

இந்தியாவில் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026

image

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026, டெல்லியில் நடைபெறும் என்று உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு ஆகஸ்டில் டெல்லியில் போட்டிகள் நடைபெறும். முன்னதாக கடந்த 2009-ல் ஹைதராபாத்தில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இத்தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News September 2, 2025

10 நாள் பொறுங்க.. வெற்றிமாறன் செம அப்டேட்

image

இன்னும் 10 நாள்களில் ‘வாடிவாசல்’ படத்தின் அப்டேட்டை கூறுவதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் படம் தள்ளிப்போனதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் ‘Bad Girl’ பட விழாவில் வெற்றி இவ்வாறு கூறியுள்ளார். சூர்யாவுக்கு கம்பேக் கொடுக்குமா வாடிவாசல்?

error: Content is protected !!