News March 27, 2024
சென்னை: திருமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம்

எண்ணூர் காமராஜர் நகர் பகுதியில் பழமை வாய்ந்த வட திருச்செந்தூர் திருமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது யாகசாலை அமைத்து கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்து முருகன் மற்றும் வள்ளி தெய்வானை சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. எண்ணூர் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
Similar News
News February 15, 2026
புழல் சிறையில் பரபரப்பு!

சென்னை: வியாசர்பாட், கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்(29). இவர், கஞ்சா கடத்தல் வழக்கில் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல், வியாசர்பாடியைச் சேர்ந்த மற்றொரு அஜித்(26) என்பவர், வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர்களை நேற்று(பிப்.14) வேறு அறைக்கு மாற்ற சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போது தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
News February 15, 2026
சென்னையில் பெண் அதிரடி கைது!

பெரம்பூரைச் சேர்ந்தவர் சுகுமாறன். இவர், இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி, சாவியை வீட்டின் மறைவான இடத்தில் வைத்து விட்டு வெளியே சென்றார். இதை நோட்டமிட்ட மர்மப் பெண் ஒருவர், வீட்டில் இருந்த பணம், வெள்ளிப் பொருட்களை எடுத்துச் சென்றார். விசாரணையில், அவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த இந்துமதி(35) என்பதும் ஏற்கனவே பல திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் எனத் தெரிய வந்ததும் போலீசார் கைது செய்தனர்.
News February 15, 2026
சென்னையில் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை!

வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜாக் கார்னர் லெஸ்(27). உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், முன் தினம் இரவு தனது அறைக்குள் சென்ற அவர், நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. சந்தேகமடைந்த தந்தை ஜான், கதவை உடைத்து உள்ளே சென்ற போது, அவர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


