News January 30, 2025
விருதுநகர் மாவட்டம் புத்தகத்தை வெளியிட்ட அமைச்சர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(ஜன.29) விருதுநகர் மாவட்டம் ஒரு கண்ணோட்டம் ஒரு வரலாற்று பயணம் 1800-1950 புத்தகத்தினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் முன்னிலையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 28, 2025
விருதுநகர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும்.
1.இங்கு<
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க. 7 நாளில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News October 28, 2025
விருதுநகர்: விபத்தில் முதியவர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே சூலக்கரையைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(64) ஓய்வு பெற்ற சிமெண்ட் ஆலை தொழிலாளி. இந்நிலையில் சூலக்கரை அருகே தனது இருசக்கர வாகனத்தில் ஆறுமுகம் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் சென்று கொண்டிருந்த லாரியில் மோதியதாக கூறப்படுகிறது. தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News October 28, 2025
ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுபாலா. இவருக்கும் இவரது மனைவி பொன்லட்சுமிக்கும் அடிக்கடி சண்டை வந்து அவரது தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பொன்லட்சுமி வேலை பார்க்கும் கடைக்கு சென்று சேதுபாலா வீட்டிற்கு அழைத்து வந்து வேலைக்கு செல்லக்கூடாது என்று சண்டை போட்டு பொன்லட்சுமி அம்மா வீட்டிற்கு சென்ற நிலையில் சேதுபாலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


