News January 29, 2025

கரூர் மக்களின் கனவு நனவாகுமா?

image

கரூர் வழியாக இரவு நேரத்தில் மட்டும், சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள், பகல் நேரத்தில் சென்னைக்கு செல்ல சேலம், ஈரோடு, திருச்சி போக வேண்டிய நிலை உள்ளது. இதனால், கரூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என,பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வரும் பிப்., 1ல் மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகுமா?

Similar News

News August 23, 2025

கரூரில் சூரியகாந்தி விளைச்சல் அமோகம்

image

கரூர்: மைலம்பட்டி மேற்கு பகுதியில் மைலம்பட்டி, தரகம்பட்டி, சீதப்பட்டி, அய்யம்பாளையம், ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் சூரியகாந்தியை சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் அதிக அளவு நடவு செய்கின்றனர். மேலும் தற்போது பெய்துள்ள மழையால் நல்ல விளைச்சலை சூரியகாந்தி கொடுத்துள்ளது என மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள் வெளிப்படுத்திக் கொண்டனர்.

News August 23, 2025

கரூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

கரூர் மாவட்ட கூட்டரங்கில் (25.08.2025) அன்று மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதனையடுத்து எரிவாயு நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்கள் தெரிவித்தார்.

News August 22, 2025

கரூர்: ரூ.67,100 சம்பளத்தில் POLICE வேலை! APPLY NOW

image

கரூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

error: Content is protected !!