News January 29, 2025

அடுத்து எந்த மாவட்டத்தில் ஆய்வு? முதல்வர் அறிவிப்பு

image

முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 6, 7ஆம் தேதிகளில் நெல்லை மாவட்டத்தில் கள ஆய்வு செய்யவுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக முதல்வர் கள ஆய்வு செய்து வருகிறார். பொதுமக்கள், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கோவையில் ஆய்வை தொடங்கிய அவர் இதுவரை தூத்துக்குடி, பெரம்பலூர், நாமக்கல், விழுப்புரத்தில் கள ஆய்வை நிறைவு செய்துள்ளார்.

Similar News

News August 31, 2025

’Pookie’ வார்த்தை உருவான கதை தெரியுமா?

image

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ‘POOKIE’ என்ற வார்த்தை, 1900-களில் ஜெர்மன் மொழியில் குழந்தைகளை குறிக்கும் சொல்லாக இருந்திருக்கிறது. அப்போது பேமஸ் ஆகாத இந்த ‘Pookie’, 1960களில் வெளியான ‘Garfield’s teddy bear’ என்ற கார்ட்டூனில் இடம்பெற்றதால் அனைவராலும் அறியப்பட்டது. இதுதான் தற்போது செல்லப்பிராணிகள், மனதிற்கு பிடித்தவர்கள் மீது அன்பை வெளிப்படுத்தும் வார்த்தையாக மாறியிருக்கிறது. SHARE.

News August 31, 2025

பொது அறிவு விநாடி வினா பதில்கள்

image

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17570500>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. ஆந்திரப் பிரதேசம் (அக்டோபர் 1, 1953)
2. Kentucky Fried Chicken.
3. 4 அறைகள்.
4. தகவல் & ஒளிபரப்பு அமைச்சகம்.
5. முத்தையா முரளிதரன் (800 விக்கெட்கள்).
எத்தனை கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னீங்க.

News August 31, 2025

நாளை முதல் டீ, காபி விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

image

சென்னையில் நாளை(செப்.1) முதல் டீ, காபி உள்ளிட்டவைகளின் விலை உயர்த்தப்படுவதாக டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, இனி டீ – ₹15, பால் – ₹15, லெமன் டீ – ₹15, காபி, ஸ்பெஷல் டீ – ₹20, ராகி மால்ட் – ₹20, சுக்கு காபி – ₹20, பூஸ்ட் – ₹25, ஹார்லிக்ஸ் – ₹25 என பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் விரைவில் டீ, காபி விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. SHARE IT.

error: Content is protected !!