News January 29, 2025
ஆச்சரியம்: கர்ப்பிணியின் கருவுக்குள் கரு

மகாராஷ்டிராவின் புல்தானாவில் 35 வயதான கர்ப்பிணிக்கு சோனோகிராபி செய்தபோது, வயிற்றில் இருக்கும் குழந்தைக்குள் இன்னொரு கரு (foetus inside foetus) வளர்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் 200, இந்தியாவில் 15-20 பேருக்கு மட்டுமே இந்த நிலை உண்டாகியுள்ளது. இதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இது ஒரே மாதிரியான இரட்டையர்களின் வளர்ச்சியின்போது நிகழும் ஒழுங்கின்மையின் விளைவு என நம்பப்படுகிறது.
Similar News
News August 31, 2025
பொது அறிவு விநாடி வினா பதில்கள்

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17570500>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. ஆந்திரப் பிரதேசம் (அக்டோபர் 1, 1953)
2. Kentucky Fried Chicken.
3. 4 அறைகள்.
4. தகவல் & ஒளிபரப்பு அமைச்சகம்.
5. முத்தையா முரளிதரன் (800 விக்கெட்கள்).
எத்தனை கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னீங்க.
News August 31, 2025
நாளை முதல் டீ, காபி விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் நாளை(செப்.1) முதல் டீ, காபி உள்ளிட்டவைகளின் விலை உயர்த்தப்படுவதாக டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, இனி டீ – ₹15, பால் – ₹15, லெமன் டீ – ₹15, காபி, ஸ்பெஷல் டீ – ₹20, ராகி மால்ட் – ₹20, சுக்கு காபி – ₹20, பூஸ்ட் – ₹25, ஹார்லிக்ஸ் – ₹25 என பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் விரைவில் டீ, காபி விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. SHARE IT.
News August 31, 2025
பிஹார் போல் கோட்டை விட கூடாது: KN நேரு

வாக்காளர் பட்டியலில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என DMK நிர்வாகிகளுக்கு KN நேரு அறிவுறுத்தியுள்ளார். பிஹார் போல் வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடக்கூடாது எனவும் ஒன்றிய செயலாளர்கள் முன்னெச்சரிக்கையாக பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில், பூத் கமிட்டி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தும் பணியில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.