News January 29, 2025
பாராலிம்பிக் நாயகிக்கு பரிசளித்த மஹிந்திரா

தனக்கு ஸ்கார்பியோ கார் வழங்கிய ஆனந்த் மஹிந்திராவுக்கு பாராலிம்பிக் நாயகி ஆர்ச்சர் ஷீதல் நன்றி கூறியுள்ளார். 2024 பாராலிம்பிக்கில் வில்வித்தையில் வெண்கலம் வென்ற அவருக்கு, கார் பரிசாக வழங்கப்படும் என மஹிந்திரா அறிவித்திருந்தார். இந்நிலையில், ஷீதல் தனது பிறந்த நாளை முன்னிட்டு காரை பெற்றுக்கொண்டார். இந்த கார் இதயத்தை கொள்ளை கொண்டுள்ளதாகவும், தனது கிராம சாலைகளுக்கு ஏற்றவாறு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News August 31, 2025
இந்த வாரத்தில் பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

பள்ளிகளுக்கு இந்த வாரத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. செப்.5-ம் தேதி(வெள்ளிக்கிழமை) மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறையாகும். அதனைத் தொடர்ந்து செப்.6(சனிக்கிழமை), செப்.7(ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறையாகும். வரும் 15-ம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்குவதால் இந்த தொடர் விடுமுறை, மாணவர்கள் தேர்வுக்கு தயாராக மிகவும் பயனுள்ள வகையில் அமையும். SHARE IT.
News August 31, 2025
இந்தியாவும் சீனாவும் இனி நண்பர்கள்!

PM மோடி-சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பை உலகமே உற்று நோக்குகிறது. இச்சந்திப்பின் போது, இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் எனவும் இருநாடுகளின் வெற்றியில் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்றும் சீன அதிபர் பேசியுள்ளார். அதோடு, டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர் கூறியிருப்பது, USA-வுக்கு அவர் விடுக்கும் மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
News August 31, 2025
MLC உறுப்பினராகிறார் Ex கிரிக்கெட் வீரர் அசாருதீன்

முன்னாள் கிரிக்கெட்டர் அசாருதீன் தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினராக (MLC) தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவரை Governor Quota-வின் கீழ் பரிந்துரைக்க முடிவெடுத்துள்ளது. இது குறித்து அசாருதீன் வெளியிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து, ஒருமைப்பாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் மாநிலத்திற்கு சேவை செய்வேன் என குறிப்பிட்டுள்ளார்.