News January 29, 2025
தங்கப் பதக்கம் வெல்வதே அடுத்த இலக்கு!

டோக்கியோவில் நடைபெறவுள்ள போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு என தமிழகத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் பிரித்வி சேகர் தெரிவித்துள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற காது கேளாதோருக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்ற அவர், 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதைத் தொடர்ந்து சென்னை திரும்பிய அவர், அதிக பயிற்சி பெற்று அடுத்த ஆண்டும் 3 ஆவது முறையாக வெற்றி பெறுவேன் என்றார்.
Similar News
News August 31, 2025
இந்த வாரத்தில் பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

பள்ளிகளுக்கு இந்த வாரத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. செப்.5-ம் தேதி(வெள்ளிக்கிழமை) மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறையாகும். அதனைத் தொடர்ந்து செப்.6(சனிக்கிழமை), செப்.7(ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறையாகும். வரும் 15-ம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்குவதால் இந்த தொடர் விடுமுறை, மாணவர்கள் தேர்வுக்கு தயாராக மிகவும் பயனுள்ள வகையில் அமையும். SHARE IT.
News August 31, 2025
இந்தியாவும் சீனாவும் இனி நண்பர்கள்!

PM மோடி-சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பை உலகமே உற்று நோக்குகிறது. இச்சந்திப்பின் போது, இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் எனவும் இருநாடுகளின் வெற்றியில் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்றும் சீன அதிபர் பேசியுள்ளார். அதோடு, டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர் கூறியிருப்பது, USA-வுக்கு அவர் விடுக்கும் மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
News August 31, 2025
MLC உறுப்பினராகிறார் Ex கிரிக்கெட் வீரர் அசாருதீன்

முன்னாள் கிரிக்கெட்டர் அசாருதீன் தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினராக (MLC) தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவரை Governor Quota-வின் கீழ் பரிந்துரைக்க முடிவெடுத்துள்ளது. இது குறித்து அசாருதீன் வெளியிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து, ஒருமைப்பாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் மாநிலத்திற்கு சேவை செய்வேன் என குறிப்பிட்டுள்ளார்.