News March 27, 2024

கோவை வேட்பாளர் அண்ணாமலை சொத்து விபரம்

image

கோவையில் திமுக-அதிமுக-பாஜக ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. இதனால் கோவை மிகவும் பரபரப்பான தொகுதியான உருவெடுத்துள்ளது. இந்நிலையில் பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலையின் சொத்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, அவர் அசையும் சொத்து 36 லட்சம், அசையா சொத்து ரூ.1.12 கோடி, அவரது மனைவி பெயரில் அசையும் சொத்து ரூ.2 கோடி, அசையா சொத்து 53 லட்சம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News February 15, 2026

கோவை வரும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

image

கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது. அங்குள்ள ஆதியோகி சிலை முன் நடைபெறும் இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும் 7,000 போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News February 15, 2026

கோவை: கலைஞர் கனவு இல்லம் பெறுவது எப்படி?

image

1. தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. சொந்தமாக பட்டா நிலம் இருக்க வேண்டும். (குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலம்).
3. ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ.3.50 லட்சம் அரசு வழங்குகிறது.
4. விண்ணப்பிக்க, உங்கள் பகுதி ஊராட்சி மன்றத் தலைவர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO)அணுகி அனுகவும்.
5. வீடு கட்ட நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க

News February 15, 2026

கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை

image

நாமக்கல்லைச் சேர்ந்த ஹரிணி(20). கோவை அருகே தனியாக தோழிகளுடன் அறை எடுத்து தங்கி கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு உணவு டெலிவரி ஊழியர் சதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சதீஷ், அவசரம் என கூறி ஹரிணியிடம் ஒன்றரை சவரன் தங்க நகையை பெற்று திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!