News March 27, 2024
தூத்துக்குடி: கனிமொழி சொத்து மதிப்பு எவ்வளவு?

தூத்துக்குடி எம்பி வேட்பாளர் கனிமொழி தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 மதிப்பிலான 3 கார்கள் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் 704 கிராம் தங்கம், 13.03 காரட் வைரம் உள்ளிட்டவைகள் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நகைகளின் மதிப்பு ரூ.55 லட்சத்து 37 ஆயிரத்து 455 ஆகும்.
Similar News
News November 6, 2025
திருச்செந்தூர்: சரமாரியாக அடித்துக் கொலை

காயல்பட்டினத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது (53) என்பவர் குலசை காவடிபிறை தெருவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அவருடன் பணியாற்றி வந்த முகமது ஹசன் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவருடன் நடத்திய விசாரணையில் இருவரும் ஒன்றாக மது அருந்திய போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் ஹாலோ பிளாக் கல்லால் சரமாரியாக அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
News November 6, 2025
தூத்துக்குடி கொலையில் இருவருக்கு ஆயுள்

கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. கடந்த 2019-ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக இவரை இவரது உறவினர்களான உடையார் மற்றும் கோதண்ட ராமர் ஆகியோர் வெட்டி கொலை செய்தனர். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று உடையார் மற்றும் கோதண்ட ராமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News November 6, 2025
தூத்துக்குடி: கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்

கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. கடந்த 2019-ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக இவரை இவரது உறவினர்களான உடையார் மற்றும் கோதண்ட ராமர் ஆகியோர் வெட்டி கொலை செய்தனர். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று உடையார் மற்றும் கோதண்ட ராமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


