News March 27, 2024

நீலகிரி: பாராட்டை பெற்று வரும் அக்கா தங்கை

image

பந்தலுார் அருகே பாட்டவயல் கரும்பன்மூலா பகுதியை சேர்ந்த சைனுதின், சீனத் தம்பதி. இவர்களுக்கு பாத்திமத்து சுகைனா, ஷப்னா ஜாஸ்மின் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் எலும்பு சிதைவு நோய் உள்ளதால், உடல் வளர்ச்சி குன்றி நடமாட முடியாமலும், கை கால்களை நீட்ட முடியாமலும் உள்ளனர். இந்நிலையில் இருவரும் முறையே 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொது தேர்வை உதவியாளர் உதவியுடன் எழுதினர். இது பாராட்டை பெற்றுவருகிறது.

Similar News

News December 9, 2025

கூடலூர் அருகே வசமாக சிக்கிய நபர்!

image

கூடலூர் வனக்கோட்டம், சேரம்பாடி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட சேரங்கோடு கிராமத்தில், வசிக்கும் இளங்கோவன் (59) என்பவர், தனது வீட்டின் வெளியே, முள்ளம்பன்றி இறைச்சியை சுத்தம் செய்து, சமைக்க தயார் செய்வதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், இளங்கோவைனை கைது செய்து, குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News December 9, 2025

நீலகிரி: கொட்டிக்கிடக்கும் வேலைகள் APPLY NOW

image

1) கேந்திரி வித்யாலயா பள்ளிகளில் 14,967 பேருக்கு வேலை-( https://www.cbse.gov.in/).

2) புலனாய்வுத்துறையில் 362 பேருக்கு வேலை-(https://www.mha.gov.in/).

3) ரயில்வேயில் 2,569 பேருக்கு வேலை-(https://www.rrbchennai.gov.in/).

4) மத்திய காவல்படையில் 25,487 பேருக்கு வேலை-(https://ssc.gov.in/).

5) SBI வங்கியில் 996 பேருக்கு வேலை-(https://sbi.bank.in/).

வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 9, 2025

நீலகிரி: ஃபோனுக்கு WIFI இலவசம்!

image

நீலகிரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!