News January 29, 2025
Fact Check: கும்பமேளாவில் பங்கேற்ற பிரகாஷ்ராஜ்?

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அதற்கு நேரமில்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியிருந்தார். இந்நிலையில் இன்று உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் அவர் பங்கேற்று, கங்கையின் புனித நீராடுவதுபோல், புகைப்படத்தை வெளியிட்டு, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இது உண்மையான புகைப்படம் இல்லை. AI மூலம் உருவாக்கப்பட்டது என Fact Check மூலம் தெரியவந்துள்ளது.
Similar News
News August 30, 2025
பொம்மையுடன் கல்யாணம்.. 3வது குழந்தையும் பெற்ற நபர்!

நம்மை சுற்றி இவரை போன்ற பல விசித்திரமான மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். கொலம்பியாவை சேர்ந்த கிரிஸ்டியன் என்பவர் நடாலியா என்ற பொம்மையை காதலித்து, திருமணம் செய்து கொண்டு, 3 பொம்மை குழந்தைகளுக்கும் தந்தையாகியுள்ளார். அவர் மனநிலை பாதிப்புள்ளவர் என பலர் விமர்சிக்கும் நிலையில், ஒரு பொருள் மீது அதீத காதல் வரும் ‘Objectophilia’ என்ற நிலை இருப்பதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
News August 30, 2025
BREAKING: செப்டம்பர் முதல் ₹2,500.. CM ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ₹2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அதன்படி, செப்டம்பர் 1-ம் தேதி நெல் கொள்முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இனி சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,545-க்கு கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம், லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவர். SHARE IT.
News August 30, 2025
பரோட்டா + பீஃப்.. நூதன போராட்டம்

கொச்சியில் உள்ள கனரா வங்கி வளாக கேண்டீனில் பீஃப் விற்கவோ, சாப்பிடவோ கூடாது என மேலாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கியின் எதிரே பரோட்டா, பீஃப் சாப்பிடும் நூதன போராட்டத்தை Beef Fest., ஆக ஊழியர்கள் நடத்தியுள்ளனர். அந்த மேலாளர் பிஹாரைச் சேர்ந்தவர் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?