News March 27, 2024
அரியலூர்: தந்தை, மகனுக்கு 10ஆண்டுகள் சிறை

அரியலூர் அருகே சிறுவளூரை சேர்ந்த சாமிநாதனுக்கும் கோவிந்தனுக்கும் இடையே கடந்த 2021ல் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும் அவரது மகன் தர்மராஜ் ஆகியோர் சாமிநாதனை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கோவிந்தன், தர்மராஜ் ஆகியோருக்கு தலா 10ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
Similar News
News August 9, 2025
அரியலூர் பறவைகள் சரணாலயம் பற்றி தெரியுமா?

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் உள்ள மிக பெரிய சரணாலயங்களில் ஒன்றாகும். அக்டோபர் முதல் மே மாதம் வரை மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் இங்கு வந்து தங்கி செல்கின்றன. இங்கு கூழைக்கிடா, பாம்பு நாரை, மைல் கால் கோழி, வண்ண நாரை, மடையான், நாமக்கோழி, சிறைவி உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களை இங்கு காணலாம். ஷேர் பண்ணுங்க!
News August 9, 2025
தா.பழூர்: மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

அரவிந்த் கண் மருத்துவமனை தா.பழூர் லயன்ஸ் சங்கம் மற்றும் அரியலூர் மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் (ஆக.,10) காலை 8 மணி முதல் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. முகாமில் பார்வைத் திறன் குன்றியோர் தங்களது ஆதார் கார்டு நகலை எடுத்து வந்து பதிவு செய்து பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 9, 2025
அரியலூரில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் பயனாளிகளுக்கு நலவாரிய அடையாள அட்டைகள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர், எம்.எல்.ஏ கு.சின்னப்பா, அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.