News January 28, 2025
கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டம் கோழிக்கழிச்சல் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் 01.02.2025 முதல் 14.02.2025 வரை நடைபெற உள்ளது. எனவே, கோழி வளர்க்கும் பயனாளிகள் அனைவரும் அவர்களது கிராமத்திற்கு அரு அருகில் கால்நடை நிலையங்களில் தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தி நோய் வராமல் பாதுகாத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
திண்டுக்கல்: சக்கரை நோயா..? முக்கிய அறிவிப்பு!

திண்டுக்கல் மக்களே…, நிங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு SHARE
News August 20, 2025
திண்டுக்கல்லில் அனுமதிக்கப்பட்ட இடங்கள்!

திண்டுக்கல்லில் விநாயகர் சிலை கரைக்க அனுமதிக்கப்பட்ட இடங்கள்:
▶️கோட்டைக்குளம்
▶️நத்தம்: அம்மன் குளம்
▶️வத்தலகுண்டு: கண்ணாப்பட்டி ஆறு
▶️நிலக்கோட்டை: அணைப்பட்டி வைகை ஆறு
▶️பழனி: சண்முகநதி,
▶️ஒட்டன்சத்திரம்: தலைக்குத்து அருவி
▶️கொடைக்கானல்: டோபிகானல்
▶️வேடசந்தூர்: குடகனாறு
▶️வடமதுரை: நரிப்பாறை
▶️குஜிலியம்பாறை: பங்காளமேடு குளம்
▶️சின்னாளப்பட்டி: தொம்மன்குளம்
▶️தாடிக்கொம்பு: குடகனாறு (SHARE)
News August 20, 2025
ஒட்டன்சத்திரம் போக்சோ வழக்கு சிறை மற்றும் அபராதம்!

ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த தின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டி(58) என்பவரை ஒட்டன்சத்திரம் மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் செல்லப்பாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் இன்று விதித்தனர்.