News March 27, 2024
BREAKING: இரண்டு விமானங்கள் மோதி விபத்து

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானமும் ஏர் இந்தியா விமானமும் நேருக்கு நேர் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர் இந்தியா விமானம் சென்னைக்கு புறப்பட தயாராக நின்றிருந்த நிலையில், ஓடுபாதையில் புறப்பட தயாரான இண்டிகோ விமானம் அதன் மீது மோதியது. இதில் இரண்டு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன. நல் வாய்ப்பாக 300 பயணிகளும் காயமின்றி தப்பினர். இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.
Similar News
News December 27, 2025
ஷில்பா ஷெட்டி டீப்ஃபேக் வீடியோஸ்: நீதிமன்றம் உத்தரவு

நடிகை ஷில்பா ஷெட்டியின் டீப்ஃபேக் வீடியோக்களின் URL-கள், இணைப்புகள் மற்றும் பதிவுகளை உடனடியாக நீக்கும்படி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. AI மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கக்கோரி, ஷில்பா ஷெட்டி தாக்கல் செய்த மனுவை விசாரித்த அமர்வு, பிரபலங்களின் பிரைவசி உரிமையை மீறும் வகையில் சித்தரிக்கக் கூடாது என்று உத்தரவில் தெரிவித்துள்ளது.
News December 27, 2025
கோலிக்கு பரிசுத் தொகை இவ்வளவுதானா?

விஜய் ஹசாரே டிராபியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், டெல்லி அணிக்காக விளையாடி, 77 ரன்கள் எடுத்த கோலிக்கு ஆட்ட நாயகன் (POTM) பரிசுத் தொகையாக ரூ.10,000 காசோலை வழங்கப்பட்டது. இந்நிலையில், பெரிய வீரரான கோலி ₹10,000 காசோலையை வாங்குவது வேடிக்கையாக உள்ளதாக, SM-ல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News December 27, 2025
தமிழக சிறுமிக்கு மத்திய அரசு உயரிய விருது

உயிரை துச்சமாக நினைத்து சிறுவனை காப்பாற்ற முயன்ற போது உயிரை இழந்த கோவை சிறுமி வியோமா பிரியாவுக்கு பால புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறுமியின் தாயார் அர்ச்சனா அந்த விருதை ஜனாதிபதியிடம் இருந்து கனத்த இதயத்துடன் பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு மே 23-ம் தேதி சரவணம்பட்டி அருகே பூங்காவில் மின்சாரம் தாக்கி துடித்த சிறுவனை, வியோமா பிரியா துணிச்சலாக மீட்க போராடி உயிரை பறிகொடுத்தார்.


