News January 28, 2025
ICCயின் உயரிய விருது: கெத்து காட்டிய பும்ரா!

பும்ராவிற்கு ‘Sir Garfield Sobers Trophy’ விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த விருதை பெறும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனார். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து, ICC இந்த விருதை வழங்கி வருகிறது. 3 வகை கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கியதால் அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, சச்சின், டிராவிட், கோலி, அஸ்வின் இந்த விருதை பெற்றனர்.
Similar News
News August 30, 2025
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள்? ஸ்டாலின் பதில்

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக கடந்த சில நாள்களாக பேசப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, புதிய கட்சிகள் திமுக பக்கம் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் வருகின்றனர் என்று CM ஸ்டாலின் பதிலளித்துள்ளார். மேலும், கருத்துக்கணிப்புகள் என்ன சொன்னாலும் அவற்றை மிஞ்சி திமுக வெற்றிபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 30, 2025
RECIPE: வயசுப் பெண்களுக்கு முக்கியமான உளுந்தங்களி!

◆உளுந்தங்களியில் கார்போஹைட்ரேட், பொட்டாசியம், வைட்டமின் நிறைந்திருப்பதால், பெண்களுக்கு மிகவும் நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
➥தண்ணீரில் அரிசிமாவு, வறுத்த பாசிப்பருப்பு மாவை கலந்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
➥அதை நன்கு கொதிக்க வைத்து, கருப்பட்டி or வெல்லம், உளுந்து மாவு சேர்த்து நன்றாக கிளறவும்.
➥அதில், ஏலக்காய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்தால் சுவையான உளுந்தங்களி ரெடி. SHARE IT.
News August 30, 2025
சற்றுமுன்: இன்று ஒரே நாளில் ₹3000 உயர்வு … புதிய உச்சம்

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹3 உயர்ந்து ₹134-க்கும், கிலோ வெள்ளி ₹3000 உயர்ந்து ₹1,34,000-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், கடந்த 20-ம் தேதி ₹73,440-க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் ₹3520 (2 நாளில் மட்டும் ₹1720) அதிகரித்து இன்று ₹76,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.