News January 28, 2025
DeepSeek நமக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: டிரம்ப்

சீனாவின் குறைந்த விலை AI கருவியான DeepSeekன் வரவு, USA பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடியை இழப்பை ஏற்படுத்தியது. இது USA தொழில் நிறுவனங்களுக்கான எச்சரிக்கை என டிரம்ப் வார்னிங் கொடுத்துள்ளார். இந்த தொழில் போட்டியில் வெற்றி பெற கவனம் செலுத்த வேண்டும் எனவும், பல லட்சம் கோடிகளை செலவு செய்யாமல், குறைந்த முதலீட்டில் தரமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News August 30, 2025
விஜய்யின் அடுத்த ஸ்கெட்ச்.. ஈரோட்டில் புதிய அத்தியாயம்

வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மக்கள் சந்திப்பை நடத்த அக்கட்சி தலைவர் விஜய் முடிவு செய்துள்ளாராம். தவெகவின் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், இன்று பனையூரில் மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
News August 30, 2025
மனதை தீண்டும் ‘சீதா ராமம்’ மிருணாள் தாகூர்

சின்னத்திரையில் தனது சினிமா பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக ஜொலிப்பவர் மிருணாள் தாகூர். துல்கர் சல்மானுக்கு அவர் ஜோடியாக நடித்த ‘சீதா ராமம்’ படம் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவிலும் செம ஆக்டிவாக மிருணாள் தாகூர் உள்ளார். சமீபத்தில் சேலை அணிந்து அவர் பகிர்ந்த போட்டோஸ் டிராண்டாகியுள்ளன. மேலே உள்ள போட்டோஸை கண்டு ரசியுங்கள்…
News August 30, 2025
இன்று காலை வெளிநாடு புறப்படுகிறார் ஸ்டாலின்

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், அயலக தமிழர்களை சந்திக்கவும் ஜெர்மனி, இங்கிலாந்தில் CM ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, இன்று காலை 9 மணிக்கு CM விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் செல்கிறார். இன்று இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடையும் அவருக்கு அயலக தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். முதலீட்டாளர்களை முதல்வர் நாளை சந்திக்கிறார்.