News January 28, 2025

புதுசா வேலைக்கு போறீங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க

image

*CTC (Cost to Company): மொத்தம் சம்பளம் *Net salary: கைக்கு வரும் சம்பளம் *Basic Pay: இது அடிப்படை சம்பளம். இதன் அடிப்படையில் தான் PF, HRA கணக்கிடப்படும் *HRA (House Rent Allowance): வரி இல்லாமல் நிறுவனம் அளிக்கும் தொகை. *Special Allowance: பணியை பாராட்டி ஒரு நிறுவனம் வழங்கும் தொகை *PF: சம்பளத்தை வைத்து எவ்வளவு பென்ஷன் பிடிக்கப்பட்டு, PF வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். SHARE IT.

Similar News

News August 30, 2025

இன்று காலை வெளிநாடு புறப்படுகிறார் ஸ்டாலின்

image

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், அயலக தமிழர்களை சந்திக்கவும் ஜெர்மனி, இங்கிலாந்தில் CM ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, இன்று காலை 9 மணிக்கு CM விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் செல்கிறார். இன்று இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடையும் அவருக்கு அயலக தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். முதலீட்டாளர்களை முதல்வர் நாளை சந்திக்கிறார்.

News August 30, 2025

மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: தங்கம் தென்னரசு

image

GST-ல் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பாக தமிழகம் உள்பட பாஜக ஆளாத மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை ஆதரிக்க தயார், அதே வேளையில் இந்த நடைமுறையால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மாநில நிதி பாதுகாக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News August 30, 2025

லோகேஷ் கனகராஜுடன் ஜோடி சேரும் ரஜினியின் மருமகள்

image

அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக களம் காணவுள்ளார். படத்திற்கான கதை தயாராகிவிட்டதால், விரைவில் படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருக்கிறது. லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக மிர்னா மேனன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மிர்னா மேனன், ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!