News January 28, 2025

கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு தவறு: டெல்லி நீர் வாரியம்

image

டெல்லிக்கு குடிநீரில் <<15288651>>பாஜக விஷம் கலப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் <<>>கூறியதை, டெல்லி நீர் வாரிய CEO ஷில்பா ஷிண்டே மறுத்துள்ளார். இது உண்மைக்கு முற்றிலும் மாறானது என்றதுடன், நீரின் தரத்தை தொடர்ந்து கண்காணித்து பராமரிப்பதாகவும் அவர் பதிலளித்தார். மேலும், குளிர்காலத்தில் நீர்வரத்து குறைவதால், நதியில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளின் செறிவு உயருவதால் நச்சுத்தன்மை அதிகரிக்கிறது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Similar News

News August 30, 2025

மனதை தீண்டும் ‘சீதா ராமம்’ மிருணாள் தாகூர்

image

சின்னத்திரையில் தனது சினிமா பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக ஜொலிப்பவர் மிருணாள் தாகூர். துல்கர் சல்மானுக்கு அவர் ஜோடியாக நடித்த ‘சீதா ராமம்’ படம் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவிலும் செம ஆக்டிவாக மிருணாள் தாகூர் உள்ளார். சமீபத்தில் சேலை அணிந்து அவர் பகிர்ந்த போட்டோஸ் டிராண்டாகியுள்ளன. மேலே உள்ள போட்டோஸை கண்டு ரசியுங்கள்…

News August 30, 2025

இன்று காலை வெளிநாடு புறப்படுகிறார் ஸ்டாலின்

image

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், அயலக தமிழர்களை சந்திக்கவும் ஜெர்மனி, இங்கிலாந்தில் CM ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, இன்று காலை 9 மணிக்கு CM விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் செல்கிறார். இன்று இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடையும் அவருக்கு அயலக தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். முதலீட்டாளர்களை முதல்வர் நாளை சந்திக்கிறார்.

News August 30, 2025

மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: தங்கம் தென்னரசு

image

GST-ல் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பாக தமிழகம் உள்பட பாஜக ஆளாத மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை ஆதரிக்க தயார், அதே வேளையில் இந்த நடைமுறையால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மாநில நிதி பாதுகாக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!