News January 28, 2025
நம்பர் 1 CM இல்ல, ஆனால்: முதல்வரின் திட்டம் இதுதான்

எதிர்க்கட்சி தலைவர்களின் சிந்தனையில் குறை உள்ளதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மக்களுக்கு நல்லது நடந்தால் சில எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிடிக்காது எனவும், தானும் நல்லது செய்யாமல், பிறரையும் நல்லது செய்ய விடமாட்டார்கள் எனவும் CM சாடியுள்ளார். NO.1 முதல்வர் என்பதை விட, NO.1 தமிழ்நாட்டை உருவாக்குவதே தனது இலக்கு எனவும், தன்னை முன்னிலைப்படுத்த எதையும் செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 30, 2025
அதிமுக, பாஜக புதிய வியூகம்.. மாறும் தமிழக தேர்தல் களம்

தேவேந்திர குல வேளாளர்களை ஒருங்கிணைக்க ஜான் பாண்டியனிடம், BJP புதிய அசைன்மென்ட் கொடுத்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டால் ADMK மீது அதிருப்தியில் உள்ள அவர்களை ஜான் பாண்டியன் சரிகட்டினால், அவருக்கு 5 சீட்டுகளை கொடுக்க NDA முடிவு செய்துள்ளதாம். 2024 லோக்சபா தேர்தலில் நெல்லை, குமரி, தேனியில் ADMK டெபாசிட் இழக்க தேவேந்திர குல வேளாளர்களின் எதிர்ப்பு முக்கிய காரணம் என்பது கவனிக்கத்தக்கது.
News August 30, 2025
சென்னையில் புல்லட் ரயில் சேவை.. அட்டகாசமான தகவல்

தென்னிந்தியாவில் புல்லட் ரயில் சேவை கொண்டு வரப்படும் என சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார். அதற்கான கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், இது ஐதராபாத், அமராவதி, சென்னை, பெங்களூருவை இணைக்கும் வகையில் அமையும் எனவும் கூறியுள்ளார். இந்த சேவையால் 4 நகரங்களைச் சேர்ந்த 5 கோடி மக்கள் பயன்பெறுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புல்லட் ரயில் போக ரெடியா?
News August 30, 2025
விஜய்யின் அடுத்த ஸ்கெட்ச்.. ஈரோட்டில் புதிய அத்தியாயம்

வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மக்கள் சந்திப்பை நடத்த அக்கட்சி தலைவர் விஜய் முடிவு செய்துள்ளாராம். தவெகவின் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், இன்று பனையூரில் மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.