News January 28, 2025
பாறைக்குழியில் 3 பேர் பலி: இழப்பீடு வழங்க பாஜக அறிக்கை

திருப்பூர், வேலம்பாளையம், இடுவாயைச் சேர்ந்த ரேவதி, அவரின் இரு மகள்கள் ஆகிய மூன்று பேர் பாறைக்குழியில் துணி துவைக்க சென்றபோது, நீரில் மூழ்கி இறந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு பா.ஜ., ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. இந்த இழப்புக்கு, தமிழக அரசு உடனடியாக அந்த குடும்பத்துக்கு, 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News August 23, 2025
திருப்பூர்: சொந்தமாக பனியன் கம்பெனி தொடங்க ஆசையா..?

திருப்பூர் மக்களே ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு ரூ.75 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.5 கோடி வரையிலான கடனுதவி NEEDS திட்டத்தின் மூலம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. புதிதாக பனியன் கம்பெனியில் தொடங்க நினைப்போர் இத்திட்டத்தில் பயனடையலாம். இந்தக் கடனை திரும்பி செலுத்த 9 ஆண்டு கால அவகாசம், மானியத்துடன் 3% வட்டிக்கு வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News August 23, 2025
திருப்பூர்: பனியன் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு!

திருப்பூர்: பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயற்குழு நேற்று(ஆக.22) நடைபெற்றது. இதில், பனியன் தொழிலாளர்களுக்கு 150 சதவீதம் சம்பள உயர்வு, பஞ்சப்படி மாதம் ரூ.3000, அதிக புள்ளிக்கு தலா ரூ.30 பைசா, பயணப்படி ரூ.50, வாடகைப்படியாக ரூ.3000, ஓவர் டைம் பேட்டா 100 சதவீதம் உயர்வு, மேலும் காப்பீடு,கல்வி உதவி, திருமண உதவி தொகை ஆகியவை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.( SHARE IT)
News August 23, 2025
திருப்பூர்: ஜீ.பே மூலம் ரூ.92,000 வழிப்பறி!

திருப்பூர்: பல்லடம், மாணிக்கபுரம் சாலைப் பகுதியில் இணையதள ஆப் மூலம் பழகிய வாலிபர்கள் காட்டுப்பகுதிக்கு கோடாங்கி பாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை வரவழைத்து அவரிடம் இருந்த ரூ.92 ஆயிரம் பணத்தை ஜீ.பே மூலமாக பெற்றுக்கொண்டு அடித்து துரத்தியதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .இந்த வழக்கில் சபரி ராஜன்,நவீன், சந்திர பிரகாஷ், டேனியல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.