News March 27, 2024
டி.ஆர்.பாலு செய்யாத திட்டங்களை நான் செய்வேன்

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் டி.ஆர்.பாலு மீண்டும் அவர் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.டி.ஆர்.பாலு செய்யாத பல திட்டங்களை நான் வெற்றி பெற்றால் செய்வேன் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் இன்று தெரிவித்தார்.
Similar News
News September 9, 2025
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மழை

ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், செங்கல்பட்டு மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். (ஷேர் பண்ணுங்க)
News September 9, 2025
செங்கல்பட்டு: whats App இருக்கா உஷார்!

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை whats App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்தத் துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News September 9, 2025
குடிநீர் ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள தமிழக உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் 3 குழுவாக பிரிந்து குடிநீர் தயாரிக்கப்படும் ஆலைகளில் குடிநீர் தயாரிக்கப்படும் தேதி, குடிநீர் காலாவதியாகும் தேதி, மற்றும் கடைகளில் விற்கப்படும் கேன் குடிநீர் ஆகியவற்றை ஆய்வு செய்ய உத்தரவு.