News January 28, 2025

கடலூரில் ஆம்புலன்ஸ் சேவை மூலம் 85,939 பேர் பயன்

image

கடலுார் மாவட்டத்தில, கடந்த ஓராண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் விபத்தில் காயமடைந்த 17,626 பேர் உட்பட 85,939 பேர் பயனடைந்துள்ளனர். இதில் பிரசவம், சாலை விபத்துகள், நெஞ்சுவலி, சுவாச கோளாறு உள்ளிட்ட அவசர மருத்துவ உதவிக்காக பலர் பயனடைந்துள்ளனர். சிறப்பு சேவையாக விஷம் குடித்தல், நாய் மற்றும் பாம்பு கடி ஆகிய அவசரங்களிலும் சேவை வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டைவிட கூடுதலாக 846 பேர் பயன்பெற்றனர். 

Similar News

News August 16, 2025

கடலூர்: மனை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

கடலூர் மக்களே, அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், அவற்றை வரன்முறை செய்து கொள்ள அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <>onlineppa.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் கூடுதல் தகவல்களுக்கு உங்கள் அருகிலுள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொண்டு விவரங்களை பெறலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News August 16, 2025

கடலூர் அருகே அரசு பேருந்து மோதி கல்லூரி மாணவர் பலி

image

காட்டுமன்னார்கோயில் அடுத்த கலியமலையை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் திலிப்குமார் (21). தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.2-ம் ஆண்டு படித்து வந்த திலிப்குமார் நேற்று பைக்கில் பொய்யாபிள்ளைசாவடி-காட்டுமன்னார்கோயில் சாலையில் சென்ற போது, எதிரே வந்த அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் திலிப்குமார் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News August 16, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், நேற்று, (ஆக.15) இரவு முதல் இன்று (ஆக.16) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!