News March 27, 2024
‘டைட்டானிக்’ கப்பலின் கதவு ₹6 கோடிக்கு ஏலம்

டைட்டானிக் படத்தில் இடம்பெற்ற கதவு ஒன்று, ஏலத்தில் சுமார் ₹6 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. டைட்டானிக் படத்தின் இறுதி நிமிடங்களில், கதாநாயகனும், கதாநாயகியும் கடலில் மிதக்கும் கதவு ஒன்றின் மீது உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்ததை மறந்திருக்க மாட்டோம். அந்த கதவானது, டல்லாஸில் நடைபெற்ற ஹெரிடேஜ் ஏலத்தில் சுமார் 718,750 டாலர்களுக்கு விற்பனையானது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,98,99,163 ஆகும்.
Similar News
News March 17, 2026
அதிக வெற்றியை தந்தால் அமைச்சர் பதவி: ஸ்டாலின்

திமுக 2.0 ஆட்சியில் சீனியாரிட்டி என்பதெல்லாம் இரண்டாம்பட்சம் தான் என சீனியர்களுக்கு, ஸ்டாலின் ஷாக் கொடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் உழைப்பவர்களுக்கு பரிசு நிச்சயம் எனக் கூறிய அவர், அதிக வெற்றியை தேடித்தரும் மாவட்ட செயலாளர்களுக்கே அமைச்சர் பதவி எனவும் கூறியுள்ளார். அதேபோல், மண்டல பொறுப்பாளர்கள் தங்கள் வசமுள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
News March 17, 2026
கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

CPI-யின் மதூர் சத்யா மீதான பாலியல் புகார் தொடர்பாக கட்சி தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்தனர். இதன்பின், மதூர் சத்யாவை கட்சியிலிருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். AIYF, ISCUF அமைப்புகளில் மதூர் சத்யா வகித்து வந்த அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் இந்த பாலியல் விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.
News March 17, 2026
ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்ய App அறிமுகம்

SUVIDHA 2.0 என்ற புதிய செயலியை ECI அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் மூலம் வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுவை ஆன்லைனிலேயே தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் பற்றி ECI விரிவாக விரைவில் தெளிவுபடுத்தும் என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், மக்களைக் கவரும் நோக்கில் நேரடியாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்வதையே வேட்பாளர்கள் விரும்புவர் என்றும் கூறப்படுகிறது.


