News January 28, 2025

நாமக்கல்லில் இன்றைய காய் கனி விலை நிலவரம்

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 28ம் தேதி காய் கனி பூ அதிகம் மற்றும் குறைந்தபட்ச விலை நிலவரம் தக்காளி ரூ 20 கத்தரி ரூ 25 முருங்கை ரூ 120 வெண்டை ரூ 60 தேங்காய் ரூ 56 எலுமிச்சை ரூ 30 சின்னவெங்காயம் ரூ 30 பெரியவெங்காயம் ரூ 45 பீன்ஸ் ரூ 56 கேரட் ரூ 66 பீட்ரூட் ரூ 30 உருளை ரூ 40 பூசணி ரூ 20 சுரை ரூ 8 முள்ளங்கி ரூ 20 அவரை ரூ 50 கொத்தவரை ரூ 70 உள்ளிட்ட பொருட்கள் இந்த விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.

Similar News

News November 11, 2025

நாமக்கல்லில் அரசு வேலை: சூப்பர் சம்பளம்!

image

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டப் பிரிவில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.14,000. இப்பணிக்கு நவ.17ம் தேதிக்குள் வகுரம்பட்டி, அம்மா பூங்கா எதிரில் உள்ள சமுதாய கூடம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மகமை அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

நாமக்கலில் பெண்கள் அதிரடி கைது

image

நாமக்கல் மாவட்டம் பரமத்தி-வேலூர் அருகே உள்ள ஒரு வீட்டில் முதியோர் இல்லத்திற்கு நன்கொடை வசூல் செய்வதாக கூறி வீட்டுக்குள் நுழைந்து கைபேசி மற்றும் ரூ.1,000 பணம் திருடிய புவனேஸ்வரி(39) மற்றும் மீனா(25) இருவரையும் பரமத்தி போலீசார் கைது செய்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

News November 11, 2025

நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி!

image

அத்தனூர், வனவியல் விரிவாக்க மையம் சார்பில் நாமக்கல்லில் உள்ள தனியார் நிலங்களில் ஓராண்டுக்கு மேல் தரிசாக விவசாய பயன்பாட்டுக்கு அல்லாத நிலங்களிலும், மற்ற விவசாயி நிலங்களின் வயல் முழுவதும், வரப்பு பகுதியிலும் மகாகனி, தேக்கு, செம்மரம், வேம்பு, சந்தனம் உள்ளிட்ட பல இன செடிகள் இலவசமாக நடவு செய்து தரப்பட உள்ளது. ஆகவே, ஆர்வமுள்ள விவசாயிகள் 8940133289, 9751051006 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம்.

error: Content is protected !!