News January 28, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்டம் -ஆட்சியர் தகவல்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயனடைவதற்கான வகையில் வரும் ஜன31 வெள்ளி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத் துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளை அளிக்கலாம்.
Similar News
News September 1, 2025
ரூ.26¾ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர்சந்தையில் இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று 50 3/4 டன் காய்கறிகள் மற்றும் 12 1/2 டன் பழங்கள் என மொத்தம் 63 3/4 டன் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.26 லட்சத்து 70 ஆயிரத்து 495-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 12 ஆயிரத்து 638 பேர் வாங்கி சென்றனர்.
News September 1, 2025
நாமக்கல் மாவட்டம் உருவான வரலாறு..!

01-01-1997ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டது நாமக்கல் மாவட்டம். இம்மாவட்டத்தின் எல்லைகள் வடக்கில் சேலம், தெற்கில் கரூர், கிழக்கில் திருச்சி மற்றும் சேலம் மற்றும் மேற்கில் ஈரோடு அமைந்துள்ளது.நாமக்கல்லில் உள்ள பாறை கோட்டை இந்த ஊரின் சிறப்பு அம்சமாகும். முட்டை உற்பத்தியில் நாமக்கல் முதலிடத்தில் உள்ளது. எனவே, “முட்டை நகரம்” என்று அழைக்கப்படுகிறது. (SHAREit)
News September 1, 2025
நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.9 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.98 ஆக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி விலை கடந்த 5 நாட்களில் கிலோவுக்கு ரூ.9 அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.