News March 27, 2024

ஆறாவது பன்னீர் செல்வம் வேட்புமனு தாக்கல்

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 6ஆவது பன்னீர் செல்வம் என்ற நபர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட 5 பேர் (முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்பட) வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று எம்.பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட மேலும் ஒரு நபர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Similar News

News November 6, 2025

அந்த மேஜிக் மீண்டும் நடக்குமா?

image

ரஜினி என்றாலே ஜாலியான, குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் மாஸ் கமர்சியல் ஹீரோ. ஆனால், அப்படியான ரஜினியை ‘பேட்ட’ படத்திற்கு பிறகு பெரிதாக பார்க்க முடியவில்லை. எல்லாமே ரொம்ப சீரியஸான ரத்தம் தெறிக்கும் அதிரடி படங்களாகவே சமீபத்தில் வெளிவந்துள்ளன. ஆனால், நாம் ரசித்து கொண்டாடி தீர்த்த ரஜினியை மீண்டும் சுந்தர்.சி திரையில் கொண்டுவருவாரா என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் உள்ளனர். சாதிப்பாரா சுந்தர்.சி?

News November 6, 2025

இன்று கனமழை.. 9 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி & வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. அதன்படி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, தி.மலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். எனவே, இந்த மாவட்டங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின்கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும்.

News November 6, 2025

Office போகணும்னாலே கஷ்டமா இருக்கா? இந்த டீ குடிங்க!

image

நாள்பட்ட மன அழுத்தம், உடல் சோர்வு, Anxiety காரணமாக காலை எழுந்ததும் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றலாம். இதனால் ஆபீஸுக்கு செல்வதில் இருந்து, படுக்கையை விட்டு எழுந்திருக்கும் சாதாரண காரியங்கள் கூட கஷ்டமானதாக தெரியும். இதனை சரி செய்ய, மனதையும் உடலையும் சமநிலைப்படுத்தும் துளசி டீ-யை காலையில் பருகுங்கள். இதில் இஞ்சி & தேனை சேர்த்தும் குடிக்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். SHARE THIS.

error: Content is protected !!