News March 27, 2024
தமாகா வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் மிதிவண்டியில் தனது ஆதரவாளர்களுடன் வந்து ஸ்ரீபெரும்புதுார் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்-27) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Similar News
News October 31, 2025
செங்கல்பட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (நவ.1) பள்ளிகள் செயல்படாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமை (நவ. 1) வேலை நாளாக இருக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெறுவதால் நாளை பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க*
News October 31, 2025
செங்கல்பட்டு காவல் துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

செங்கல்பட்டு காவல் துறை இன்று (அக்.31) வாகன ஓட்டிகள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓரத்தில் நிறுத்த வேண்டாம், மேலும் இரவு நேரங்களில் வண்டிகளை பார்க் செய்யும் போது நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் வேகமாக செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இது முக்கியமான எச்சரிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது.
News October 31, 2025
செங்கல்பட்டு இன்று இரவு பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (அக்டோபர்-31) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


