News March 27, 2024

பைக் மோதி மூதாட்டி பலி

image

மைக்கேல்பட்டியைச் சேர்ந்த கலியபெருமாள், மனைவி சம்பூர்ணம்(70). இவர் சம்பவத்தன்று சாலையோரம் நடந்து சென்றபோது பின்புறம் வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியதில் படுகாயமடைந்தார். திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News March 15, 2026

தஞ்சை: உங்களிடம் இந்த எண்கள் உள்ளதா?. SAVE!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 15, 2026

தஞ்சை: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News March 15, 2026

இனி திண்டிவனத்திலும் நிற்கும் தஞ்சை எக்ஸ்பிரஸ்

image

தஞ்சாவூர் – சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் (16865/66) மற்றும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (மார்ச் 16) முதல் திண்டிவனம் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த புதிய நிறுத்தத்தால் திண்டிவனம் மற்றும் புதுச்சேரி செல்லும் பயணிகள் பெரும் பயனடைவர்.

error: Content is protected !!