News January 28, 2025
ஷமியின் முடிவு அவர்கள் கையில் உள்ளது: கோச்

ஷமி விளையாடுவது கேப்டன், தலைமை பயிற்சியாளரின் கையில் உள்ளதாக IND அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதன்ஷு கோடாக் தெரிவித்துள்ளார். ஷமியின் Fitnessல் குறையில்லை எனவும், ஆனால், அவர் விளையாடுவது பற்றி முடிவு செய்வது தனது கையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஷமி, கடைசியாக 2023 WCயில் IND-வுக்காக விளையாடினார். IND vs ENG மோதும் டி20யில் அவர் தேர்வானாலும், கடந்த 2 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை.
Similar News
News August 30, 2025
மத்திய அரசுக்கு ₹7,324 கோடி வழங்கிய LIC

லாபப் பங்குத் தொகையாக ₹7,324 கோடியை மத்திய அரசிடம் LIC வழங்கியுள்ளது. அரசிடம் இப்போது LIC-யின் 96.5% பங்குகள் உள்ளன. கடந்த 2022 மே மாதத்தில் பொதுப் பங்கு வெளியீடு முறையில் 3.5% பங்குகள் முதல்முறையாக விற்பனை செய்யப்பட்டன. இதில் மத்திய அரசுக்கு ₹21,000 கோடி கிடைத்தது. மீண்டும் 6.5% LIC பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News August 30, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 30, ஆவணி 14 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
News August 30, 2025
பாஜகவுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில் அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் தொழில் நகரங்களை மத்திய அரசு கைவிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிற செப்.2ஆம் தேதி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக கூட்டணி முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.