News March 27, 2024
கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்

தூத்துக்குடி முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவருக்கு பணம் கடனாக கொடுத்துள்ளார். இந்த பணத்தை நேற்று அருள்ராஜ் திரும்பி கேட்ட பொழுது அவரை சக்தி முருகன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது பற்றி முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்
Similar News
News February 17, 2026
தூத்துக்குடிக்கு கனமழை எச்சரிக்கை – IMD

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் சூழலில், இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகையில் பிப்.21 ம் தேதி கனமழை பெய்ய கூடும். மறுநாள் 22ம் தேதி தென்காசி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. SHARE IT..
News February 16, 2026
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News February 16, 2026
தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் 950 மனுக்கள் ஏற்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் கல்வி உதவித்தொகை மற்றும் முதியோர்/விதவை சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5,479 மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் 950 மனுக்கள் மக்களால் வழங்கப்பட்டு ஏற்கப்பட்டது.


