News March 27, 2024
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது

முதல்கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 3 மணியோடு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றிருக்கிறது. இதனையடுத்து வேட்புமனு பரிசீலனை 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. 30ஆம் தேதிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்றைய தினமே வெளியிடப்படும்.
Similar News
News August 31, 2025
Beauty Tips: முடி அடர்த்தியா வளர இந்த ஒரு விஷயம் போதும்

ஒருவரின் முக அழகை முடிவு செய்வது முடியாக தான் இருக்கிறது. இதனால் அதீத முடி உதிர்வால் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனை சரி செய்ய ஒரு ஸ்பூன் எள் போதும். எள்ளில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஈ அதிக அளவில் இருப்பதால் முடி சார்ந்த பிரச்னைகளை இது சரி செய்கிறது. இதற்கு, வாரத்திற்கு இருமுறை எள்ளை அரைத்து தயிருடன் சேர்த்து ஹேர் பேக் போட்டுவந்தால் முடி அடர்த்தியாக வளரும். SHARE.
News August 31, 2025
BREAKING: விஜய் தலைமையில் கூட்டணி

2026 தேர்தலில் விஜய் தலைமையில் புதிய அணி அமையும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிகள், சீமான் தனித்து போட்டி என்ற சூழல் இருக்கும் நிலையில், விஜய் தலைமையில் நான்காவதாக ஒரு அணி உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என டிடிவி ஏற்கெனவே கூறி இருந்தார். அவரது கருத்து தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கான அச்சாரமாக பார்க்கப்படுகிறது.
News August 31, 2025
ஆஸி.,யில் இந்தியர்களுக்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறி, ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் பேரணி நடத்தியுள்ளனர். இதை தடுக்க அரசியல்வாதிகளுக்கு தைரியம் இல்லை எனவும், இந்த மாஸ் குடியேற்றத்தை தடுக்க ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். ஆனால், இவர்கள் நாட்டில் இன்வெறியையும், வெறுப்பையும் பரப்புவதாக அரசாங்கம் சாடியுள்ளது.