News March 27, 2024

திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி.!

image

திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி அளித்தார்: அதில், தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் கொடுக்க மறுத்தாலும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும்போது, அவர்கள் பம்பரம் சின்னம் ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பாஜகவை எதிர்க்கும் இயக்கங்களை முடக்கவே , இதுபோன்று வருமான வரித்துறை, அமலாக்கத்துறை  தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு பயன்படுத்துகிறது என்றார்.

Similar News

News December 4, 2025

திருச்சியில் வாகன ஏலம் அறிவிப்பு – போலீஸ்

image

திருச்சி மாவட்ட காவல்துறையினரால், சட்ட விரோத மதுவிற்பனை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத இரண்டு சக்கர வாகனங்கள்-10, நான்கு சக்கர வாகனம்-2 மூன்று சக்கர வாகனம்-1 என மொத்தம் 13 வாகனங்கள் வரும் 10-ம் தேதி திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது என திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 2025-26 பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ராபீ பருவத்தில் பயிரிடப்பட்ட சிவப்பு மிளகாய்க்கு 31.01.26 வரையிலும், வெங்காய பயிருக்கு 15.02.26 வரையிலும், வாழை, மரவள்ளி பயிருக்கு 28.02.26 வரையிலும் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் உள்ளது. எனவே விவசாயிகள் பிரீமியம் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!