News January 27, 2025
இ.பி.எஸ். மீதான வழக்குக்கு தடை

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் விவரங்களை மறைத்து விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க கீழமை நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
ஆத்துார் அருகே பிறந்த 18 நாளில் பெண் சிசு உயிரிழப்பு

சேலம்: ஆத்துார்,முல்லைவாடி, வடக்குகாடு, சக்தி நகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாலியான ஜெயவேல் (24). இவரது மனைவி 18 நாளுக்கு முன் பெண் குழந்தை பெற்றெடுத்தார். இந்தநிலையில் நேற்று, அந்த குழந்தைக்கு முச்சுத்திணறல் ஏற்படவே, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்ததாக தெரிவித்தார். இது குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News July 8, 2025
சேலம்: திடீரென தீப்பற்றிய எலக்ட்ரிக் பைக்!

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த வேலகவுண்டம்பாளையம் அருகே, எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஒன்று வாகனத்தின் பேட்டரியின் அதிக வெப்பத்தால், திடீரென தீப்பற்றியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
News July 8, 2025
‘அய்யா கேட்டால் இங்கேயே உயிரை விடுவேன்’

திண்டிவனத்தில் நடந்த பா.ம.க.வின் மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், “என்னை கட்சியை விட்டு நீக்குவதற்கோ, பொறுப்புகளை மாற்றுவதற்கோ அதிகாரமிக்கவர் மருத்துவர்.அய்யா மட்டுமே. 36 ஆண்டுகளாக அவர் காலில் கிடக்குறேன். அருளு உன் உயிர் வேண்டும் என்று அய்யா கேட்டார், இப்போதே உங்கள் முன் கழுத்தை அறுத்து உயிரை விடுவேன்” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.