News January 27, 2025
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தையல் இயந்திரம்

வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 நபர்களுக்கு ரூ.6,500 மதிப்பிலான தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வழங்கினார்.
Similar News
News July 9, 2025
திருவாரூர்: முதலமைச்சரின் 2 நாள் பயணம்

2 நாள் பயணமாக இன்று (ஜூலை 9) திருவாரூருக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கோட்டத்திலிருந்து பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக ரோடு ஷோ செல்கிறார். அதனை அடுத்து, திருவாரூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை திறந்துவைக்கிறார். திருவாரூரில் இரவு தங்கும் முதலமைச்சர், நாளை இன்று (ஜூலை 10) காலை அரசு விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பவுள்ளார்.
News July 9, 2025
திருவாரூர்: ஆற்றில் மூழ்கிய கூலி தொழிலாளியின் உடல் மீட்பு

கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி முகமது ஹனிபா (56). இவர், நேற்று முன்தினம் பாய்க்காரத் தெரு பாலம் அருகில் உள்ள வெண்ணாற்றில் குளிப்பதற்காக இறங்கியபோது, ஆற்றில் அதிக அளவில் சென்ற தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கி மாயமானார். இதனை அடுத்து கூத்தாநல்லூர் தீயணைப்பு படையினர் தகவல் அறிந்து, நேற்று முன்தினம் முதல் தேடும் பணியில் ஈடுபட்டு, நேற்று மாலை முகமது ஹனிபாவின் உடலை மீட்டனர்.
News July 9, 2025
திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய ரோந்து பணி காவலர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் ஜூலை 8 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை. இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல்துறையின் உடனடி உதவிக்கு எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.