News January 27, 2025
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

குடியரசுத் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம், ஆத்தூர், மேட்டூர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று வணிக நிறுவனங்கள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், அதிகாரிகள் நேற்று (ஜன.26) நடத்திய ஆய்வில் இயங்கிய 34 கடைகள் உள்பட் 70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும் என சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.
Similar News
News November 16, 2025
சேலம்: ரூ.520 செலுத்தினால் ரூ.15 லட்சம்!

சேலம் கிழக்கு கோட்ட தபால் துறை சார்பில், விபத்தில் சிக்கிய 4 பேருக்கு காப்பீட்டுத தொகை வழங்கப்பட்டது. இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் ஆண்டுக்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அருகே உள்ள அஞ்சலகங்கள், தொடர்புகொண்டு இந்த காப்பீட்டு திட்டத்தில் இணையலாம். SHARE IT
News November 16, 2025
சேலம்: உள்ளூரில் இருபாலருக்கும் வேலை

சேலத்தில் செயல்பட்டு வரும் XTREEM MOBILES விற்பனையகத்தில் 2 ஆண், 1 பெண் என இருபாலருக்கு Office sales & service only quality checker வேலை வாய்ப்பு உள்ளது. இதற்கு அனுபவம் அல்லது அனுபவம் இல்லாதவராகவும், 22 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 முதல் 20,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வருகின்ற நவ.30க்குள் இந்த லிங்கை <
News November 16, 2025
சேலம்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

சேலம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


