News March 27, 2024
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி 7 நாட்களாக சிறையில் இருக்கும் நிலையில், அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
Similar News
News April 22, 2025
சம்மரில் செல்போன் ரொம்ப சூடாகிறதா?

தொடர் பயன்பாட்டால், போன் அதிகளவில் சூடாகும். இது சம்மர் சீசனில் இன்னும் அதிகமாகவே நிகழும். இந்த பிரச்னையை தீர்க்க ➢நேரடி வெயிலில் இருந்து போனை விலக்கி வைக்கவும் ➢சார்ஜ் செய்யும் போது அதிகமாக போனை யூஸ் பண்ண வேண்டாம் ➢எப்போதும் தேவையில்லாத பின்னணி ஆப்-களை மூடி வைக்கவும் ➢லொகேஷன் ஆப்ஷனை ஆப் செய்து வைக்கவும் ➢அதிக ஸ்பேஸை உரிஞ்சும் கேமிங் ஆப்-களை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். SHARE IT.
News April 22, 2025
இனி குழந்தைகளும் வங்கி கணக்கு தொடங்கலாம்!

பள்ளி மாணவ, மாணவிகள் வங்கிக் கணக்கு தொடங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் ஸ்காலர்ஷிப், கல்விக்கான மானியம் அவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், தாமாகவே வங்கிக் கணக்கு தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் இனி அவர்கள் சேமிப்பு, டெபாசிட் கணக்குகளை தொடங்கி, இயக்கவும் முடியும்.
News April 22, 2025
மீனவர்கள் படகு மீது மோதிய சரக்கு கப்பல்!

கன்னியாகுமரியின் முட்டம் அருகே தனியார் மீன்பிடி துறைமுகத்தில் படகு மீது கப்பல் மோதியது. கடியப்பட்டணத்தைச் சேர்ந்த அருள் ரமேஷ் என்பவரின் விசைப்படகில் 21 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். சுமார் 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பெரிய சரக்கு கப்பல் ஒன்று படகு மீது மோதியது. நல்வாய்ப்பாக மீனவர்கள் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பியுள்ளனர்.