News January 27, 2025
மனைவியின் கழுத்தை வெட்டிய கணவர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே பு.கொணலவாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தபோது இவருக்கும் இவரது மனைவிக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கோவிந்தன் கொடுவாளால் மனைவியின் கழுத்தை வெட்டியதில் படுகாயமடைந்த அவரது மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கோவிந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 13, 2025
கள்ளக்குறிச்சி: பொருளை மாற்ற மறுத்தால் புகார் அளிக்கலாம்

கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற (அ) பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. கள்ளக்குறிச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் புகார் அளிக்கலாம். SHARE IT
News September 13, 2025
கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளிக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். ஊராட்சி வரி ரசீது, கட்டட வரைபடம், கட்டட வரி ரசீது, ஒப்பந்த பத்திரம் மற்றும் ₹600 செலுத்தியதற்கான வங்கி சலான் ஆகியவை வேண்டும். கல் அல்லது தார்சு கட்டிடங்களில் மட்டுமே கடைகள் அமைக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளார். ஷேர்
News September 13, 2025
கள்ளக்குறிச்சி: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் செய்ய இன்று (செப்.13) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்யப்படும். இதில், மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க