News January 27, 2025
நீலகிரி: 3வது மனைவியை கொன்ற கணவன் கைது

பந்தலூர் அருகே வெட்டுவாடி, மடமூலா பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் யசோதா (54). இவர், 2 மாதங்களுக்கு முன்பு சந்திரன் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். கடந்த டிசம்பர் 24ம் தேதி ஏற்பட்ட தகராறில் யசோதாவை, சந்திரன் கல்லால் தாக்கி கொன்றுள்ளார். இந்த நிலையில் எருமாடு காவல் எஸ்.ஐ. பாஸ்கரன் தலைமறைவான சந்திரனை நேற்று கைது செய்து விசாரித்து வருகிறார்.
Similar News
News August 21, 2025
நீலகிரி: தனியார் வேலை வாய்ப்பு முகாம்

நீலகிரி, ஊட்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக நாளை பிங்கர் போஸ்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு, பட்டதாரிகள், ஐடிஐ கணினி இயக்குபவர்கள், ஓட்டுனர்கள் என அனைத்து விதமான தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 21, 2025
நீலகிரி காவலர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா தலைமையில் இன்று காவலர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டமானது நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எடுத்துக் கூறினார்.
News August 21, 2025
போக்சோ மற்றும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை தாலுக்கா, குன்னூர் தாலுக்கா, கூடலூர் தாலுக்கா, கோத்தகிரி தாலுக்கா, பந்தலூர் தாலுக்கா, குந்தா தாலுக்கா, போன்ற ஆறு தாலுகாவிலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் பிரதான சாலைகள் மற்றும் பள்ளிகளில், இன்று நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக போக்சோ மற்றும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வை அனைத்து பகுதிகளிலும் ஏற்படுத்தினர்.