News March 27, 2024
சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் ஐபிஎல் அணிகள்

இந்தியாவில் நடைபெற்று வரும் 2024 ஐபிஎல் தொடர், ரசிகர்களிடையே களைகட்டி வருகிறது. இதுவரை நடந்த 7 போட்டிகளிலும், சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வென்றுள்ளன. அதன்படி, CSK-2, RR-1, KKR-1, PBKS-1, RCB-1, GT-1 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் 6 இடங்களை பிடித்துள்ளது. சொந்த மண்ணில் ரசிகர்கள் கொடுக்கும் அளவில்லா ஆதரவு, அணிகளுக்கு தனி பலத்தை கொடுக்கும் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
Similar News
News March 26, 2026
நேற்று அதிமுக; இன்று திமுக!

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமை இன்று வெளியிடுகிறது. நேற்று முக்குலத்தோர் புலிப்படை, மஜக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு நிறைவடைந்தது. தேமுதிகவுக்கான தொகுதிகளில் மட்டும் இழுபறி நீடித்து வரும் நிலையில் காலை 10 மணிக்குள் அவை களையப்பட்டு பின்னர், இறுதிப் பட்டியலை ஸ்டாலின் வெளியிட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
கேன்சரை தடுக்கும் அற்புத பழம்.. தினமும் 1 போதும்!

எளிதில் கிடைப்பதாலேயே கொய்யாவின் அருமையை நாம் மதிப்பதில்லை. ஆனால், கேன்சரை தடுக்கும் அற்புத சக்தி இந்த பழத்தில் இருக்கிறது என டாக்டர்கள் கூறுகின்றனர். ➤ஆய்வுகளின் படி, கொய்யாவில் உள்ள லைகோபீன் என்ற கரோட்டினாய்டு, கேன்சர் செல்கள் உருவாவதையும், அவற்றின் வளர்ச்சியையும் தடுக்கிறது ➤இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது ➤நார்ச்சத்து வயிறு பிரச்னைகளை சரி செய்கிறது. SHARE.
News March 26, 2026
உலகின் டாப் தலைவர்களின் லிஸ்ட்.. உச்சத்தில் PM மோடி!

Morning Consult என்ற US நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் உலகின் பிரபலமான தலைவராக PM மோடி தேர்வாகியுள்ளார். அவருக்கு 68% வாக்குகள் கிடைத்துள்ளது. அதே நேரத்தில், அவருக்கு எதிராகவும் 26% வாக்குகள் பதிவாகி உள்ளதாம். இந்த லிஸ்ட்டில் காய் பார்மலின் (ஜனாதிபதி, சுவிட்சர்லாந்து) 2-வது இடத்திலும், லீ ஜே மியுங் (PM, தென்கொரியா) 3-வது இடத்திலும் உள்ளனர். US அதிபர் டிரம்ப் 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.


