News January 26, 2025
வேங்கைவயல் வழக்கில் CBI விசாரணை வேண்டாம்: விஜய்

வேங்கைவயல் மக்களுக்கு நியாயம் கிடைக்க ஐகோர்ட் நேரடி கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க விஜய் வலியுறுத்தியுள்ளார். ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டால் அதனை மறு விசாரணை நடத்துவதில் எவ்வித தவறும் இல்லை எனவும், CBI விசாரணைக்கு உத்தரவிட்டால் அது மேலும் கால தாமதம் ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் கருத்து குறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News August 29, 2025
பகல் 12 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

✪நாளை முதல் <<17550292>>வெளிநாட்டு <<>>பயணம் செல்லும் CM ஸ்டாலின்!
✪அன்பில் மகேஸ் <<17550487>>பொய் <<>>சொல்கிறார்.. அன்புமணி விளாசல்
✪மீண்டும் <<17550522>>தூய்மை <<>>பணியாளர்கள் போராட்டம்.. 500 போலீசார் குவிப்பு
✪தங்கம் விலை <<17549786>>சவரனுக்கு <<>>₹520 உயர்ந்தது
✪ஜப்பானில் <<17548690>>காயத்ரி <<>>மந்திரம் பாடி PM மோடிக்கு வரவேற்பு
✪டயமண்ட் லீக் தொடர்.. 2-வது இடம் பிடித்த நீரஜ் சோப்ரா ✪கர்ப்பமாக்கி <<17550332>>ஏமாற்றிவிட்டார்<<>>.. மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார்
News August 29, 2025
காலி பணியிடங்களை உடனே நிரப்புங்க.. தமிழக அரசு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 3 வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை காலிபணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, காலம் தாழ்த்தாமல், உடனடியாக பணியிடங்களை நிரப்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
News August 29, 2025
BREAKING: வெடிக்கப்போகும் ‘ஸ்டிரைக்’ போராட்டம்

தனியார்மயத்தை எதிர்த்து சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் 13 நாட்கள் போராட்டம் நடத்தினர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி அவர்களை போலீஸ் கைது செய்தது. இந்நிலையில், மீண்டும் அவர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைதுசெய்ய, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.