News January 26, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை. உடனே போங்க

76ஆவது குடியரசு தினத்தையொட்டி பள்ளிகளில் இன்று கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றனர். அதன்பின், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும். இளம் வயதிலேயே மாணவர்களின் மனதில் தேசப்பற்று வளர இந்த கொடியேற்ற நிகழ்ச்சிகள் காரணமாக அமையும். பெற்றோர் இந்நாளை விடுமுறை போல கருதாமல் மாணவச் செல்வங்களை பள்ளிக்கு அனுப்பி நாட்டுப் பற்றை வளர்க்க வேண்டும்.
Similar News
News August 29, 2025
Operation விஜய் அட்டாக்.. கைகோர்த்த திமுக-நாதக?

இளைஞர்கள் ஆதரவை அலேக்காக தூக்குவதால் தவெக மீது நாதகவுக்கு ஏற்கனவே பூசல் இருந்துவருகிறது. இந்நிலையில் ‘அங்கிள்’ சர்ச்சைக்கு பிறகு இதனை பயன்படுத்திக்கொள்ள நினைத்த உதயநிதி, விஜய் அட்டாக் தொடர்பாக சீமானுடன் பேச ஒரு டீமை அவரது வீட்டிற்கு அனுப்பியிருந்தார் என கூறப்படுகிறது. இதற்கு ஓகே சொன்ன சீமான் இனி எல்லா இடத்திலும் விஜய்யை ரோஸ்ட் செய்யும் Mode-ல் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News August 29, 2025
இன்று நடிகர் விஷாலுக்கு நிச்சயதார்த்தம்!

நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெறுகிறது. நடிகர் சங்க பில்டிங்கை கட்டி முடித்துவிட்டு தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருந்த விஷால், தற்போது கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், திருமண பந்தத்தில் நுழைய இருக்கிறார். சென்னையில் உள்ள விஷாலின் வீட்டில் இரு வீட்டார் & நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.
News August 29, 2025
சர்ச்சையான உதயநிதி selfie

பெண் காவல்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்த திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஶ்ரீதரனுடன் உதயநிதி selfie எடுத்தது சர்ச்சையாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை உதயநிதி வெளியிட்டார். இதனையடுத்து, அந்த புகைப்படத்தை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள அண்ணாமலை, ‘அடடே, என்ன ஒரு ஆட்சி’ என்று சாடியிருக்கிறார்.