News January 26, 2025
திருவாரூரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு

திருவாரூர் விஜயபுரம் பழைய நாகை சாலையில், தங்கமுத்து மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தது அறநிலையத்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உதவியுடன் அங்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த இடத்தினை அளவீடு செய்து மீட்டனர். அதன் சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். SHARE NOW!
Similar News
News July 9, 2025
திருவாரூர்: முதலமைச்சரின் 2 நாள் பயணம்

2 நாள் பயணமாக இன்று (ஜூலை 9) திருவாரூருக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கோட்டத்திலிருந்து பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக ரோடு ஷோ செல்கிறார். அதனை அடுத்து, திருவாரூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை திறந்துவைக்கிறார். திருவாரூரில் இரவு தங்கும் முதலமைச்சர், நாளை இன்று (ஜூலை 10) காலை அரசு விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பவுள்ளார்.
News July 9, 2025
திருவாரூர்: ஆற்றில் மூழ்கிய கூலி தொழிலாளியின் உடல் மீட்பு

கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி முகமது ஹனிபா (56). இவர், நேற்று முன்தினம் பாய்க்காரத் தெரு பாலம் அருகில் உள்ள வெண்ணாற்றில் குளிப்பதற்காக இறங்கியபோது, ஆற்றில் அதிக அளவில் சென்ற தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கி மாயமானார். இதனை அடுத்து கூத்தாநல்லூர் தீயணைப்பு படையினர் தகவல் அறிந்து, நேற்று முன்தினம் முதல் தேடும் பணியில் ஈடுபட்டு, நேற்று மாலை முகமது ஹனிபாவின் உடலை மீட்டனர்.
News July 9, 2025
திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய ரோந்து பணி காவலர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் ஜூலை 8 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை. இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல்துறையின் உடனடி உதவிக்கு எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.