News March 27, 2024
மும்பை அணிக்காக 200வது போட்டியில் இறங்கும் ரோஹித்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று ரோஹித் ஷர்மா விளையாடவுள்ள போட்டி, மும்பை அணிக்காக அவர் விளையாடும் 200வது ஐபிஎல் போட்டியாகும். 2011ல் மும்பை அணியில் சேர்ந்தது முதல் இதுவரை 199 போட்டிகளில் விளையாடி 5,084 ரன்கள் குவித்துள்ளார். இதில் 34 அரைசதங்கள், ஒரு சதம் அடங்கும். 2013ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனான பிறகு, 10 ஆண்டுகளில் 5 முறை கோப்பையை வென்று தந்துள்ளார்.
Similar News
News January 31, 2026
பிப்ரவரியில் வானில் நிகழும் அற்புதங்கள்!

பிப்ரவரி மாதம் வானில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1 – பனி நிலவு, பிப்ரவரி 17 – சூரிய கிரகணம், பிப்ரவரி 18 – மிக மெல்லிய பிறை நிலவு புதன் கோளுக்கு அருகில் தோன்றும், பிப்ரவரி 19 – சனி கிரஹம் நிலவுக்கு அருகில் தோன்றும், பிப்ரவரி 28 – புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் வான்வெளியில் ஒரு வில் போன்ற வடிவில் அணிவகுக்கும்.
News January 31, 2026
பிப்ரவரி முதல் அரசு மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

தமிழக அரசு மாதிரிப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை பிப்ரவரியில் (திங்கள்கிழமை முதல்) தொடங்கவுள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் பிப்ரவரி 2-வது வாரம் வெளியாகும். அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை மே மாதத்தில் தொடங்கவுள்ளது. நவீன உள்கட்டமைப்புகளுடன் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளிகளில் நீட், JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
News January 31, 2026
நாடு முழுவதும் ஸ்டிரைக்

8-வது ஊதியக் குழு, ஓய்வூதியம் மற்றும் பணியாளர் நியமனம் தொடர்பான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், பிப்.12-ல் வேலைநிறுத்தம் செய்யப்படும் என மத்திய அரசு ஊழியர்கள் & தொழிலாளர்கள் கூட்டமைப்பு (CCGEW) அறிவித்துள்ளது. வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை என்பதை உறுதி செய்யக்கோரி, சமீபத்தில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது மத்திய அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.


