News January 25, 2025
நடிகர் குத்தப்பட்ட சம்பவம்: மேலும் ஒருவருக்கு தொடர்பு?

பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில், புது திருப்பமாக மேலும் ஒருவருக்கு தொடர்பிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மும்பை வீட்டில் இரவில் சயிப் அலிகான் இருந்தபோது கத்தியால் குத்தப்பட்டார். இதுதாெடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த விஜய் தாஸ் என்பவரை மும்பை போலீஸ் கைது செய்தது. விசாரணையில் கத்தியை வாங்கிய இடம் உள்ளிட்ட தகவலை வெளியிடாததால் சந்தேகம் அதிகரித்துள்ளது.
Similar News
News August 29, 2025
ரஷ்யாவுக்கு உக்ரைன் கொடுத்த பெரும் அடி

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்யாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளுக்கு எரிபொருள் வழங்கி வந்த ரஷ்யா, தற்போது உள்நாட்டு மக்களின் தேவைக்கே எரிபொருள் வழங்க முடியாமல் திணறி வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறும் உக்ரைன், அதேவேளையில் மற்றொரு புறம் சாதுர்யமாக காய்களை நகர்த்தி வருகிறது.
News August 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் ▶குறள் எண்: 442
▶குறள்: உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
▶ பொருள்: வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
News August 29, 2025
ஆயுள்காலம் அதிகரிக்க இதுதான் ஒரே வழி…

இந்தியாவின் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலத்தை 3.5 ஆண்டுகள் அதகரிக்கலாமாம். உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி, இந்தியா முழுவதும் காற்று மாசுபாடு குறைந்ததால், டெல்லி மக்களின் ஆயுள்காலம் 8.2 ஆண்டுகளாக அதிகரிக்கும் எனவும் சிகாகோ பல்கலையின் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மாசு குறைந்து ஆயுட்காலம் அதிகரிக்க வாய்ப்பிருக்கா மக்களே?